அறிமுகமாகிறது முதல் ஆண்ட்ராய்டு 10 ஸ்மார்ட்ஃபோன்..

Arun Prasath
புதன், 25 செப்டம்பர் 2019 (14:27 IST)
கூகுளின் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியாகிறது முதல் ஸ்மார்ட்ஃபோன்.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் சமீபத்தில் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒன்பிளஸ் 7டி என்ற புதிய ஸ்மார்ட்ஃபோனை ஆண்ட்ராய்டு 10 இயங்குத்தளத்துடன் அறிமுகப்படுத்தப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7டி, மொபைலின் சிறப்பம்சங்களாக, பிரைவசி செட்டிங்குகளை மிக எளிதாக ஒற்றை இடத்தில் மாற்றியமைக்கமுடியும் எனவும், இதனால் பயனர்கள் தங்களின் டேட்டா எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை தீர்மானிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் நாம் ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்பும்போது, நாம் அனுப்ப நினைக்கும் பதில்கள் பரிந்துரைகளாக காட்டும் எனவும் தெரியவருகிறது.

மேலும் யாராவது ஒரு இடத்திற்கு நம்மை வரச்சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினால், அந்த இடத்திற்கு செல்லும் வழியை கூகுள் மேப்ஸ் செயலிருந்து அறிந்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

முக்கியமாக ஸ்மார்ட்ஃபோன் பேட்டரி தீர்ந்து போகும் சமயத்தில் அதனை சிறுது நேரத்திற்கு பேக்கப் வழங்கும் வகையில் சேமிக்கும் அம்சமும் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த ஸ்மோர்ட்ஃபோன் சந்தைக்கு எப்போது வரும் போன்ற தகவல்கள் இதுவரை அளிக்கப்படவில்லை என தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்