சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம், இந்தியாவின் மொபைல் பயனாளர்களை பெரிதும் ஈர்த்துவருகிறது. இந்நிலையில் விவோ நிறுவனம், புதிய அம்சங்களுடன் கூடிய “விவோ எஸ் 1” என்ற மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் ஆகஸ்டு 1 அன்று சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ”விவோ எஸ் 1” ஸ்மார்ட்ஃபோன் இதற்கு முன் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தோனேஷியாவில் இந்த ஸ்மார்ட்ஃபோன் விலை IDR 3,599,000 க்கு விற்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.17,700 ஆகும். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்ஃபோன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆகிய அம்சங்களுடன் ரூ.20,000 வரை விற்கப்படலாம் என அறியப்படுகிறது. இந்தியாவின் மீடியாடெக் ஹீலியோ பி65 ஆக்டோ-கோர் பிராசஸர், 6 ஜிபி ரேம், 64 ஜிபி/128 ஜிபி ஆகிய அம்சங்களில் வெளியிடும் முதல் ஸ்மார்ட்ஃபோனாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
விவோ எஸ் 1 ஸ்மார்ட்ஃபோனில் 4500 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 6.38 இன்ச் FIID+2340x1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் போன்ற அம்சங்கள் இடம்பெரும் என கூறப்படுகிறது. மேலும் 8 MP வைடு ஆங்கில் கேமரா சென்சார், 16 MP பிரைமரி சென்சார் மற்றும் 2 MP டெப்ட் சென்சார் ஆகிய முன்று கேமரா சென்சார்கள் உள்ளன எனவும், 32 MP செக்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. கூடுதலாக கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.