ஷாக்கிங்!! விலை குறைந்து ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?
செவ்வாய், 11 ஜூன் 2019 (16:51 IST)
யாரும் எதிர்பாராத வகையில் இதுவரை இல்லாத அளவு மிக குறைந்த விலையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அமேசானில் வழங்கப்பட்டுள்ள ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் எனும் சிறப்பு விற்பனையில் ரூ.5,000 விலை குறைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
ஆம், ஒன்பிளஸ் 6டி பேஸ் மாடல் ரூ.27,999-க்கும், ஒன்பிளஸ் 6டி 6 ஜிபி ராம் ரூ.29,999-க்கும், 8 ஜிபி ராம் ரூ.31,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.