இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே மந்தமான நிலையில் இருந்து வந்தது. இருப்பினும், தற்போது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயர்ந்து 82,121 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 91 புள்ளிகள் உயர்ந்து 25,060 என்ற அளவில் உள்ளது.
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஜியோ பைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, எல் அண்ட் டி, ஸ்ரீராம் பைனான்ஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
அதேபோல், டிசிஎஸ், ஸ்டேட் வங்கி, மாருதி, ஐடிசி, இன்போசிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, இந்துஸ்தான் லீவர், ஹீரோ மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, சிப்லா, ஆக்சிஸ் வங்கி, ஆசியன் பெயிண்ட்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.