டிரிபிள் ஸ்பீட் 4ஜி நெட்வொர்க்: புதிய தொழில்நுட்பத்துடன் ஏர்டெல்!!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (13:12 IST)
ஏர்டெல் நிறுவனம் 4ஜி நெட்வொர்க் சேவையின் வேகத்தை மூன்று மடங்கு அதிகமாக்க புது தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ளது.


 
 
இந்த புது தொழில்நுட்பத்தை 5ஜி சேவைக்கான முன்னோட்டம் என்றும் கூறலாம். இந்தியாவின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய ஏர்டெல் தயாராகி வருகிறது.
 
இந்தியாவில் முதல் முறையாக மேசிவ் மல்டிப்பிள் இன்புட், மல்டிப்பிள் அவுட்புட் ( Massive Multiple Input, Multiple Output ) தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் வழக்கமான 4ஜி வேகத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வேகத்தை பெற முடியும். 
 
இந்த சேவையை பயன்படுத்த ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமோ அல்லது ஸ்மார்ட்போன் அப்கிரேடு எதையும் செய்ய  வேண்டிய அவசியம் இல்லை.  
 
முதற்கட்டமாக இந்த திட்டம் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நகரங்களில் துவங்கப்பட்டு அதன்பின் மற்ற நகரங்களில் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்