தமிழக அரசு, 10 சட்ட மசோதாக்கள் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம், "மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமை சட்டவிரோதம், ஓரே மாதத்தில் முடிவு செய்ய வேண்டும்" என தீர்ப்பளித்தது.
இதனை கண்டிப்பதாக தெரிவித்த ஜகதீப் தன்கர், “நீதிமன்றம் ஜனநாயகத்தின் மீது ஆணையிட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் ஒரு முடிவெடுக்க வேண்டுமென்று நீதிமன்றம் கட்டாயப்படுத்தும் நிலை ஏற்க முடியாது. இது அவர்களின் அரசியல் அதிகாரத்தை குறைக்கும் செயல்” என்றார்.