வைஃபை-யை போல் 100 மடங்கு வேகத்தில் இயங்கும் கருவி!
திங்கள், 20 மார்ச் 2017 (10:26 IST)
நெர்தர்லாந்தில் உள்ள இந்தோவன் பல்கலைகழத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து ஒரே நேரத்தில் பலர் வைஃபை-ஐ பயன்படுத்தினால் அதன் வேகம் குறைவது குறித்து அதன் வேகத்தை எப்படி அதிகப்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களது ஆய்வில் அகசிவப்புக் கதிர்களை பயன்படுத்தி விநாடிக்கு 40 ஜிபிஉக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினை வேகத்தடையின்றி பெற முடியும். மேலும் ஒரே வைஃபை இணைப்பில் அதிக கருவிகள் இணைக்கப்படும் போது அதன் வேகம் குறையாமல் இருப்பதை இதன் மூலம் கண்டுபிடுத்துள்ளனர்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் வைஃபை இணைப்பில் இணைக்கப்படும் ஒவ்வொரு புதிய சாதனத்துக்கும் பிரத்யேக ஒளிக்கற்றைக்கள் மூலம் இணைப்பு அளிக்கப்படும் என்பதால், இதன் வேகம் குறைய வாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.