ரிலையன்ஸ் ஜியோவை காலி செய்ய ஏர்டெல் கையில் எடுக்கும் புதிய யுக்தி!!

Webdunia
சனி, 5 நவம்பர் 2016 (15:21 IST)
ரிலையன்ஸ் ஜியோ சேவைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவின் பிரபல டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் புதிய திட்டங்களை அறிமுகம் செய்திருக்கின்றது. 


 
 
தனது, புதிய சர்வதேச ரோமிங் திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் ஸ்மார்ட்பேக் எனப் பெயரிட்டுள்ளது. இதன்படி இலவச இன்கமிங் கால், டேட்டா மற்றும் குறுந்தகவல் போன்ற சேவைகளை ஏர்டெல் வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. 
 
எவ்வித ஏர்டெல் சேவைகளைப் பயன்படுத்தும் முன்பும் ரூ.149/- ஆரம்பக் கால ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் சிறப்புச் சலுகைகளை அனுபவிக்க இயலாது.
 
ஸ்மார்ட்பேக் திட்டத்தின் கீழ் அனைத்து திட்டங்களிலும் அன்லிமிட்டெட் எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அனைத்து வேலிடிட்டி காலங்களிலும் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.
 
ஸ்மார்ட்பேக் மூலம் 30 நாட்களுக்கான வேலிடிட்டியுடன் 400 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் வழங்கப்படுகின்றது. ஒரு நாள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் 100 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வசதி வழங்கப்படுகின்றது.
 
அன்லிமிட்டெட் இன்கமிங் அழைப்புகளையும் ஸ்மார்ட்பேக்கள் வழங்குகின்றன. ஐக்கிய அரபு நாடுகளில் இருப்பவர்களுக்கு 400 நிமிடங்களும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருப்பவர்களுக்கு 100 நிமிடங்களுக்கும் இன்கமிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றன.
 
மேலும் பயனர்கள் 3ஜிபி அளவு 4ஜி டேட்டாவினை ஒரு மாத கால வேலிடிட்டியுடன் பெற முடியும். ஒரு நாள் வேலிடிட்டி கொண்ட பேக்களுக்கு 300 எம்பி டேட்டா வழங்கப்படுகின்றது.
அடுத்த கட்டுரையில்