ஐபிஎல்-2021; ஐதராபாத் அணிக்கு 236 ரன்கள் வெற்றி இலக்கு !

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (22:00 IST)
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் எடுத்து 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் 14 வது சீசனில்  இரண்டாவது பகுதி ஆட்டம் தற்போது நடந்து வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.
மும்பை அணி இன்றைய போட்டியில் மிக அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் மும்பை அணி அதிரடியாக ரன் சேர்த்தது.

 இதில், 4.2 ஓவர்களில் 67 ரன்கள் குவித்துள்ளனர். மேலும் தொடர்க்க வீரர் இஷான் கிஷான் 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

இந்நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் எடுத்து 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்