ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத முன்னாள் வீரர்கள்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (12:00 IST)
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் முன்னாள் வீரர்கள் சிலர் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கான ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. சுமார் 590 வீரர்கள் இந்த ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்திருந்த நிலையில் 204 வீரர்களை மட்டுமே பத்து அணிகளும் சேர்ந்து வாங்கியுள்ளன. இதில் முன்னாள் வீரர்கள் சிலர் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித், ஷகிப்-அல்-ஹசன், டேவிட் மலான், இயன் மோர்கன், கேதார் ஜாதவ், இஷாந்த் ஷர்மா, அமித் மிஷ்ரா, புஜாரா போன்ற முக்கிய வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படமால் போனது ரசிகர்களும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்