டாஸ் வென்றது சிஎஸ்கே: பந்துவீச்சை தேர்வு செய்த தல தோனி!

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (19:37 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 41வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தல தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
 
இன்றைய போட்டியில் சென்னை அணியில் தாக்கூருக்கு பதில் ஹர்பஜன்சிங் இணைக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐதராபாத் அணியில் ஷாபாஸ் நடீமுக்கு பதில் மனிஷ்பாண்டே களமிறங்குகிறார். அதேபோல் வில்லியம்சனுக்கு பதிலாக இன்று ஷாகிப் அல் ஹசன் ஐதராபாத் அணியில் களமிறங்கவுள்ளார்.
 
இன்றைய சென்னை அணியில் வாட்சன், டூபிளஸ்சிஸ், ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, ஜடேஜா, பிராவோ, ஹர்பஜன்சிங், தீபக் சஹார் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
 
அதேபோல் ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர், பெயர்ஸ்டோ, விஜய்சங்கர், மனிஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன், யூசுப் பதான், தீபக் ஹூடா, ரஷித்கான், புவனேஷ்குமார், காலில் அகமது மற்றும் சந்தீப் ஷர்மா ஆகியோர் விளையாடவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்