இந்நிலையில் லீக் போட்டிகள் முடிந்ததும் குவாலிஃபையர் மற்றும் இறுதிப் போட்டி நடக்க இருக்கும் வேளையில் அப்போட்டிகள் நடக்கும் இடங்கள் குறித்து பிசிசிஐ அறிவித்துள்ளது. முதலாம் குவாலிஃபயர் போட்டி சென்னையிலும், இரண்டாம் குவாலிஃபயர் போட்டி விசாகப்பட்டினத்திலும் நடைபெறும் என்றும், இறுதி போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நடப்பு சாம்பியன் அணியின் சொந்த மைதானத்தில்தான் இறுதிப் போட்டிகள் நடக்கும். அதன்படி இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சென்னை மைதானத்தில் உள்ள மூன்று கேலரிகளைத் திறக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இன்னும் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை. இந்த மூன்று கேலரிகளிலும் சேர்த்தும் மொத்தம் 12 பேர் வரைப் பார்க்கலாம். இதனால் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பாதிக்கப்படும் என்பதால் போட்டியை சென்னையில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. இறுதிப்போட்டியை சென்னையில் இருந்து மாற்றியதற்கு சென்னை ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.