நாயை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.8 லட்சம் பரிசு! – பிரபல நடிகை அறிவிப்பு!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (09:14 IST)
காணாமல் போன தனது நாயை கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.8 லட்சம் தருவதாக பிரபல ஹாலிவுட் நடிகை அறிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில் பிரபல நடிகையாகவும், பாடகியாகவும் இருந்து வருபவர் பாரிஸ் ஹில்டன். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நாய்கள் மீது ஆர்வம் கொண்ட பாரிஸ் ஹில்டன் அவரது வீட்டில் நாய்கள் சிலவற்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவர் வீட்டில் வளர்த்த அவரது செல்ல நாய் ‘டைமண்ட்’ சமீபத்தில் காணாமல் போயுள்ளது. இதனால் வருத்தத்தில் ஆழ்ந்த பாரிஸ் ஹில்டன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “எனது செல்ல நாய் டைமண்டை காணவில்லை. இதனால் மிக வேதனையில் உள்ளேன். என் செல்ல நாய் டைமண்டை கண்டுபிடித்து கொண்டு வந்து கொடுத்தாலோ அல்லது அதை கண்டுபிடித்து தகவல் தெரிவித்தாலோ எந்த கேள்வியும் இல்லாமல் 10 ஆயிரம் டாலர்கள் தர தயாராக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

அவரது பதிவை தொடர்ந்து ஆங்காங்கே சல்லடை போட்டு காணாமல் போன நாயை தேடி வருகிறார்களாம் அவரது ரசிகர்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்