ராமாயண பாதையாத்திரை திட்டம்.. ராமஜென்ம பூமி அறக்கட்டளை ஏற்பாடு..!

Siva
வியாழன், 25 ஏப்ரல் 2024 (15:53 IST)
ராமர் பிறந்த இந்தியா, சீதை பிறந்த நேபாளம் மற்றும் ராவணன் பிறந்த இலங்கை ஆகிய மூன்று நாடுகளையும் இணைக்கும் வகையில் ராமாயண பாதையாத்திரை என்ற திட்டத்தை ராமஜென்ம பூமி அறக்கட்டளை தொடங்கியுள்ளது.

அயோத்தியில் ராமர் பிறந்ததாகவும் நேபாளத்தில் சீதை பிறந்ததாகவும் இலங்கையில் ராவணன் பிறந்ததாகவும் புராணத்தில் இருக்கும் நிலையில் இந்தியா நேபாளம் இலங்கை என மூன்று நாடுகளில் பயணம் செய்யும் வகையில் மூன்று நாடுகளின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த பாதையாத்திரை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது

மேலும் இந்தியா இலங்கை மற்றும் நேபாள ஆன்மீக சுற்றுலாவாக கருதப்படும் என்றும் ராமாயணம் தொடர்புடைய இடங்களை இந்த மூன்று நாடுகளில் பிரபலப்படுத்த இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

ராமாயண பாதை யாத்திரைத் திட்டத்தில் இலங்கையில் தலைமன்னார், ராமர் பாலம், சீதாஎலிய அசோகவனம், காலி ரூமஸ்ஸல, திருக்கோணேஸ்வரம் சிவன் கோயில், புத்தளம் மானாவரி சிவன்கோயில், வெலிமடை திவுரும்பொல, உஸ்ஸன்கொட தேசிய சரணாலயம், எல்ல இராவணன் குகை, கதிர்காமம் முருகன் கோயில் ஆகிய 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்