பிருந்தாவனத்தில் இன்றளவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ ராகவேந்திரர் !!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (07:41 IST)
ஸ்ரீ ராகவேந்திரர் வேங்கடநாதனாக இந்த லோகத்தில் அவதரிக்க காரணம் லோகநாதன் ஏழுமலையில் வசிக்கும் ஏழுமலைவாசன் அதனால் மந்த்ராலயத்தில் ஏழுமலையானுக்கு தனி சிலை பிரதிஷ்டை செய்தார் குரு ஸ்ரீ ராகவேந்திரர்.


மாஞ்சாலம் கிராமத்தில் ஒரு குகை இருக்கிறது அந்த குகை சாதாரணமான குகை அல்ல பெரிய பாறைகள் ஒன்று ஒன்றாக சேர்ந்தது அந்த குகையில் அஞ்சனை ஈன்ற எதற்க்கும் அஞ்சாத பஞ்சமுக ஆஞ்சநேயர் சுயம்பு சிலை இருக்கும் அங்கு வழிபட்டு வந்தார் அதே போல் சிலை செய்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார்

இதற்கு மற்றோறு காரணம் பஞ்சமுக ஆஞ்சனையரை வலம் வந்து வழிபட்டால் ஒன்பது நவகிரகங்களை வலம் வந்து வழிபட்டதற்கு சமம்.

இது போன்ற தெய்வ சிலைகள் பிரதிஷ்டை செய்த பிறகு 1671ம் ஆண்டில் ஜீவன் தன்னுடலில் இருக்கும் போதே பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதி அடையும் முன் தான் தினமும் வழிபடும் கிருஷ்ணன் சிலையை வைத்து பாடல்கள் பாடினார்; ராகவேந்திரர் வீணை மீட்டி பாடும் பொழுது பாடல் முடியும் கடைசிவரிகளில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

குரு ஸ்ரீ ராகவேந்திரர் தினமும் வழிபடும் அந்த பகவான் கிருஷ்ணர் விக்ரகம் நடனம் ஆடியது; வான் அளவு மகிழ்ச்சி அடைந்த ராகவேந்திரர் ஜீவ சமாதி அடையும் இடத்தை அடைந்தார்.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் இந்தப் புண்ணிய பூமியில் அவதரித்து, பக்தகோடிகளுக்கு அருள் பாலித்து, அவர்களுக்கு நன்னெறிகளைப் போதித்த மகான், ஸ்ரீ ராகவேந்திரர். திருமாலின் பரம பக்தரான சங்குகர்ணரின் நான்காவது அவதாரமாக பூவுலகில் தோன்றி, இல்லறத்தைத் துறந்து, துறவு வாழ்க்கை மேற்கொண்டு அற்புதங்கள் பல நிகழ்த்திக் காட்டிய தவ முனிவர்.

உயிர்களில் இல்லை ஏற்றத் தாழ்வு, மன்னிப்பதே பெருந்தன்மை. பிருந்தாவன பிரவேசம் செய்து இன்றளவும் பக்தர்களுக்கு கருணை பொழிந்து வருகிறார் மகான் ஸ்ரீ ராகவேந்திரர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்