தேவி புராணத்தில் பிரம்ம தேவன் தோற்றம் குறித்து கூறப்படுபவை என்ன...?

வியாழன், 9 ஜூன் 2022 (06:40 IST)
மஹாவிஷ்ணுவே! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று கர்மாக்களும் ஒவ்வொரு யுகத்திலும் பிரதிபலிக்கும். பிரளயம் தோன்றி அவற்றை அழிக்கும் போது, காக்கும் கடவுளான நீ மட்டும் அழியாமல் நிற்பாய்.


ஆதிசக்தியின் அம்ஸமாகத் திகழும் நீ பிரளயத்துக்கும் ஊழித்தீக்கும் அப்பாற் பட்டு நிலைத் திருப்பாய். சத்வ குணங்களின் பரிமாணமாக நீ திகழ்வாய். உனது நாபியிலிருந்து பிரம்மன் தோன்றுவான்.

அவன் ரஜோ குணங்களின் பிரதிநிதியாக இருந்து, பிரளயத்தில் மறைந்த அனைத்தை யும் சிருஷ்டி செய்வான். அவன் அழியாத பிரம் மஞானத்தின் மொத்த உருவமாக இருந்து, மீண்டும் அண்ட சராசரங்களை உருவாக்குவான்  அவனது புருவ மத்தியில் ஒரு மாபெரும் சக்தி தோன்றும். அதன் வடிவம்தான் சிவன்.

அவன், தமோ குண வடிவமாக, ருத்ர மூர்த்தியாக நின்று, ஸம்ஹாரம் எனும் அழிக்கும் தொழிலை ஏற்பான். இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முப்பெரும் கர்மாக்களையும் பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய நீங்கள் மூவரும் செய்வீர்கள். உங்களின் இயக்க சக்தியாக நானும் என் அம்ஸங்களான தேவிகளும் செயலாற்றுவோம்'' என்று அருளினாள் தேவி.

தேவி புராணத்தின் ஏழாவது காண்டத்தில், பிரம்மன் தோன்றிய வரலாறு மேற்கண்டவாறு விளக்கப்படுகிறது. விஷ்ணுவின் நாபியிலிருந்து ஒரு தாமரைத் தண்டு வளர ஆரம்பித்தது. பிரளய வெள்ளத் தின் பரப்புகளைத் தாண்டி, அது நீண்டு வளர்ந்தது. அதன் நுனியில் ஒரு பிரமாண்டமான தாமரை மலர் மலர்ந்தது.

அதனுள் இருந்து பிரம்மதேவன் தோன்றினார். அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் இருந்தன. அவற்றில் ஒரு முகம், பின்னர் சிவபெருமானால் அழிக்கப் பட்டது. அதனால் பிரம்மன் 'நான்முகன்' என்றழைக்கப்பட்டார். அவருக்கு 'சதுரானன்' என்ற பெயரும் உண்டு.

தாம் தோன்றியதுமே விஷ்ணுவை குறித்தும், அம்பிகையைக் குறித்தும் கடும் தவம் இயற்றத் தொடங்கினார் பிரம்மன். ஜகதம்பா எனப்படும் மஹாதேவி மற்றும் மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் பிரம்மன் ஞானச்சுடராக மாறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்