வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. இதில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் அதிகம் உள்ளது.
1. யானைக்கால் நோய் உள்ளவர்கள் இந்த இலையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும்.
2. வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.
3. வல்லாரை கீரையுடன் நல்ல நீர் சேர்த்து அரைத்து வல்லாரை ஜுஸாக்கி தினமும் 25 மில்லி (அ) 30 மில்லி குடித்து வர மாரடைப்பு நோய் நம்மை நெருங்காது.
4. வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.
5. வல்லாரை கீரையை வலியை போக்கக் கூடிய ஒரு மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்த முடியும்
6. இக்கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
7. எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும்.
8. வல்லாரை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் விரை வீக்கம், வாயுவீக்கம், தசை சிதைவு, போன்றவை குணமாகிவிடும்.