தாமரை விதைகளின் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. பூவின் அடிப் பகுதியில் விதைகள் இருக்கும். சீன மருத்துவத்தில் இந்த விதைகள் அதிக ஊட்டச்சத்துள்ள உணவாகவும், ஆரோக்கியமான உணவுப் பொருள்களாகவும் மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் கொண்டாடப்படுகின்றன.
100 கிராம் தாமரை விதைகளில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகியவை உள்ளன; மீதமுள்ளவை தண்ணீர் மற்றும் தாதுக்கள். முக்கியமாகச் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதில் நார்ச்சத்தும் வைட்டமின்களும் குறைவாகவே உள்ளன.
நீண்ட, நாள்பட்ட வயிற்றுப்போக்கைத் தடுக்க உதவுகிறது. எனவே, மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்கள் இதை உட்கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
தாமரை விதைகளில் அதிகளவில் பொட்டாசியமும் குறைந்தளவு சோடியமும் உள்ளன. எனவே, இவை ரத்த நாளங்களை எளிதில் தளர்வடையச் செய்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, ஆரோக்கியமான நிலையில் வைக்கின்றன.