தொடங்கப்போகிறது அனல்காற்று: என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (19:41 IST)
இந்த ஆண்டு கோடை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கோடை காலத்தில் வீசும் அனல் காற்றில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்து தற்போது பார்ப்போம். அனல் காற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முதலில் உணவு பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். புரதச்சத்து உணவுகளை அதிகம் உண்பதையும் உச்சி வேலையில் சமைப்பதையும் தவிர்க்க வேண்டும் மதியம் 12 மணி முதல் மூன்று மணி வரை வெயில் நேரடியாக படாத வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், தாகம் எடுத்தாலும் எடுத்துவிட்டாலும் தண்ணீர் குடிப்பதை நிறுத்தக்கூடாது. எலுமிச்சை சாறு, மோர், உப்பு சேர்க்கப்பட்ட பழச்சாறுகள் ஆகியவற்றைப் பருக வேண்டும். நல்ல காற்றோட்ட வசதி உள்ள இடங்களில் இருக்க வேண்டும்
 
தர்பூசணி வெள்ளரி ஆரஞ்சு எலுமிச்சை போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். வெயில் நேரத்தில் தலை கிறுகிற தலைவலி வாந்தி ஆகியவை வந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும் 
 
நிறுத்தப்பட்ட கார் போன்ற வாகனங்களுக்குள் நீண்ட நேரம் இருக்கக் கூடாது வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாத காலை மற்றும் மாலை நேரலை மட்டும் வெளியில் செல்ல வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்