ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் கோடை காலம் தொடங்கும் என்பதும் மார்ச் இறுதி வாரத்தில் இருந்தே வெயில் கொளுத்த தொடங்கும் என்பதும் தெரிந்ததே. ஆனால் இன்னும் மார்ச் மாதமே பிறக்காத நிலையில் கோடை வெயில் உச்சத்தை அடைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் 90 டிகிரிக்கு மேல் அதிகமாக வெப்பம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று ஈரோட்டில் ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரிக்கு அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு தினங்களுக்கும் இதே நிலை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது. கோடை தொடங்கும் முன்னரே 100 டிகிரி வெயில் உச்சத்தை தொட்டு உள்ள நிலையில் அக்னி நட்சத்திர நேரத்தில் என்ன நடக்குமோ என்று பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.