க்ரீன் டீ குடித்தால் உடலுக்கு தீங்கா? அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (19:00 IST)
கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் கிரீன் டீ குடிக்க கூடாது என்றும் அவ்வாறு கிரீன் டீ குடித்தால் சில பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கிரீன் டீயில் காபின், காட்ஸின் மற்றும் டானின் ஆகிய மூலக்கூறுகள் இருப்பதால் இவை கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் கர்ப்பிணிகள் கிரீன் டீ சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. 
 
அதேபோல் பால் சுரப்பதை கிரீன் டீ குறைக்கும் என்பதால் குழந்தை பெற்ற தாய்மார்களும் இந்த க்ரீன் டீயை தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. மேலும் இரத்தசோகை, இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் கிரீன் டீயை தவிர்க்க வேண்டும் என்றும் செரிமான கோளாறு உள்ளவர்களும் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் ஒரு சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் கிரீன் டீ குடிப்பதால் உண்டாகும் என்றும் எனவே கிரீன் டீ ஒத்துக் கொள்ளாதவர்கள் அதை தவிர்ப்பது நல்லது என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்