நீரிழிவு நோயாளிகள் கொத்தவரங்காய் சாப்பிட்டால் நல்லது என்று கூறப்படும் நிலையில் அது உண்மைதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொத்தவரங்காயில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் என்றும் வைட்டமின் சி வைட்டமின் ஏ கால்சியம் புரதம் இரும்பு சத்து ஆகியவை அதிகம் இருப்பதால் கொத்தவரங்காய் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.
கொத்தவரங்காயில் உள்ள விதைகள் நார்ச்சத்து உள்ளது என்பதும் உடலில் உள்ள நன்மை தரக்கூடிய பாக்ட்ரீயாக்களை வளர்க்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது.
மேலும் இதில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் கருவுற்ற பெண்கள் இதை சாப்பிடுவது நல்லது என்றும் நீரிழிவு நோய்களுக்கு ஏற்ற உணவாகவும் இது கருதப்படுகிறது.