ஏன் இப்படி...? ஓப்போவை காப்பி அடிக்கும் சியோமி

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (13:55 IST)
சியோமி ஸ்மார்ட்போன் நிறுவனம் Mi 9 மற்றும் Mi மிக்ஸ் 4 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் மூன்று பிரைமரி கேமரா லென்ஸ் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. 
 
Mi 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்திலும், Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்திலும் அறிமுகமாகலாம். மேலும், Mi 9 ஸ்மார்ட்போன் சியோமியின் மூன்று பிரைமரி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும்.
 
கடந்த ஆண்டு ஒப்போ நிறுவனம் பெரிஸ்கோப் லென்ஸ் கொண்டிருக்கும் மூன்று கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதேபோன்ற தொழில்நுட்பத்தோடு மேலும், இரு ஸ்மார்ட்போன்களை வழங்க உள்ளது. 
 
இந்த ஸ்மார்ட்போன்களில் ஒப்போ அதிகபட்சம் 10X வரையிலான ஹைப்ரிட் சூம் வசதியை வழங்கலாம். இதேபோல சியோமி ஸ்மார்ட்போனிலும் இந்த வசதியை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்