ஜியோவுடன் போட்டியா...? சிரிப்பாய் சிரிக்கும் ஏர்டெல் - வோடபோன் நிலை

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (13:49 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் சலுகையை வழங்கியுள்ளது. இந்த ரீசார்ஜ் சலுகை வோடபோன் வழங்கும் சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏர்டெல் நிறுவனம் ரூ.169 விலையில் புதிய சலுகை அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் தேசிய ரோமிங், தினமும் 100 எஸ்எம்எஸ், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 
 
இதே விலையில் வோடபோன் வழங்கும் சலுகையில்  அன்லிமிட்டெட் கால்ஸ், ரோமிங், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 1 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
ஜியோவை வீழ்த்த ஏற்கனவே வோடபோன் மற்றும் ஐடியா இணைந்தது போல இப்போது ஏர்டெல் - வோடபோன் ஐடியா லிமிட்டெட் இணைய உள்ளது. அதாவது, இவ்விரு நிறுவனங்களும் இணைந்து தங்களது ஃபைபர் நெட்களை பயன்படுத்த தனி நிறுவனத்தை உருவாக்க முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால், ஏர்டெல் மற்றும் வோடபோன் வழங்கும் சலுகையை, இல்ல இல்ல அதை விட கூடுதல் சலுகையையே ஜியோ ரூ.149-க்கு வழங்குகிறது. அதாவது ரூ.149க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்