ஏர்டெல் வழங்கும் அதிரடி ஆஃபர் : இனி ’ஜியோ’வுக்கு ’குட் பை’ சொல்ல வேண்டியதுதான் ...

திங்கள், 10 டிசம்பர் 2018 (18:24 IST)
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ரிலையன்ஸ்ன்  ஜியோ நிறுவனம் இந்தியாவில் உள்ள பிரலமான ஏர்டெல் , டாடா டொகொமோ , வொடபோஃன் , போன்ற முக்கிய நெட்வொர்க்குகளை அசால்டாக பின்னுக்கு தள்ளிவிட்டு குறைந்த காலத்தில் இந்தியாவில் முதல் நெட்வொர்க் என்ற பெருமையை பெற்றது. அதற்கு காரணம் ஜியோ நிறுவனம் வழங்கிய அளவில்லாத ஆஃபர்கள்தான். இதனால் மற்ற நிறுவனங்கள் இந்த போட்டா போட்டியை சமாளிக்க முடியாமலும், தம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது.
இந்நிலையில் தற்போது  ஏர்டெல் நிறுவனம் தனது திட்டத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்ய முயற்சி மேற்கொள்ள உள்ளது.
 
அதில் முக்கியமாக தனது பயனாளர்களுக்கு ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக குறைந்த விலையில் 4ஜி வோல்ட்இ  ஸ்மார்ட் போன்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் 200 மின்னியன்கள் 2ஜி பயனாளர்கள் 4ஜி சேவைக்கு மாற்றப்படுவார்கள். மேலும் 900 mhz பேண்ட் ஸ்பெக்ட்ரம் அளவில் அதிவேக 4ஜி நெட்வொர்க் சேவைக் கிடைக்கவும் வழிசெய்யும். தற்போது ஜியோ மட்டுமே 4ஜி சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 
ஏர்டெல் ஸ்மார்ட் பொன் ரூபாய்2500 சலுகை விலையில் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளது. இத்துடன் 1000 கேஷ் பேக் சலுகையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.இச்சேவை வரும் போது 2ஜி சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று தெரிகிறது. ஆனால் 2ஜி யில் இருந்து 4ஜிக்கு மாறும் பயனாளர்களுக்கு ரூ30 முதல் ரூ40 மட்டுமே ரீசார்ஜ் விலையாக நிர்ணயிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.அதன் பின் வரும் 2020 3ஜி சேவை முற்றிலும் நிறுத்தபடும் என்று அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் இந்தியாவில் தொழில்நுட்பத்தில் இன்னொரு புரட்சியை ஏற்படுத்த ஏர்டெல் நிறுவனம் தீர்மானித்துள்ளது என்று இதில் இருந்து தெரிகிறது. இதனால் பயனாளர்களுக்கு  நன்மை தானே ....

ஆனால் இந்த [போட்டியை ஜியோ எப்படி சமாளிக்கப் போகிறது என்பது பெரிய கேள்விக் குறிதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்