4 ஜி தேவை - பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (13:57 IST)

பி.எஸ்.என்.எல்லுக்கு 4 ஜி அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
 

ரிலையன்ஸ் தனது ஜியோ சிம்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுட்தியதில் இருந்தே ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை அதிகளவில் இழந்து வருகின்றன. ஏர்செல் நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டே விட்டது.

4 ஜி அலைக்கற்றை வைத்துள்ள இந்த நிறுவனங்களுக்கே இந்த நிலை என்றால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்னும் 3 ஜி அலைக்கற்றையிலேயே இயங்கி வருகிறது. அதற்கு 4 ஜி அலைக்கற்றை ஒதுக்க வேண்டும் நீண்டகாலமாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதுவரையில் அதற்கான ஒப்புதலை அளிக்காமல் இழுத்தடித்து வருகிறது.

இதனால் நாளை முதல் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.மேலும் ஜியோவுக்குப் போட்டியாக பி.எஸ்.என்.எல் வந்துவிடக் கூடாது என்ற காரணத்திலாயே மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்