அம்பானியின் லேப் ராட் பிக் பஜார், மோர்.. டார்கெட் அமேசான், ப்ளிப்கார்ட்!!

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (12:36 IST)
முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள கிரானா ஸ்டோர் திட்டம் பிக் பஜார், மோர், ஈசி டே ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ளதாக கருதப்படுகிறது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி ஜியோவின் ஆஃப்லைன் தளத்தை உருவாக்குவது குறித்து பேசினார். இந்த பேச்சு தற்போது கிரானா ஸ்டோர் என்ற திட்டத்தில் வந்து முடிந்துள்ளது.  
 
ஆம், கிரானா ஸ்டோர் என்பது ஹைப்ரிட் ஆன்லைன் டு ஆஃப்லைன் தளம் (Hybrid Online-to-Offline platform) என அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சிறு மளிகைக் கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகள் கிரானா ஸ்டோரில் இணைக்கப்படும். 
இந்த ஸ்டோர் மை ஜியோ மொபைல் அப்ளிகேஷனுடன் இணைப்படும். அப்போது ஜியோ வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விலை, கேஷ்பேக் என பல சலுகைகளுடன் தேவையான பொருட்களை வாங்கலாம். ஏற்கெனவே இந்த திட்டம் மும்பை, புனே, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் சோதனை முறையில் நடைமுறையில் உள்ளது.  
ஜியோவின் இந்த புதிய திட்டம் பிக் பஜார், மோர், ஈசி டே ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ளதாக கருதப்படுகிறது. அம்பானியின் டார்கெட் அமேசாம், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் என்றாலும் சிறு நிறுவனங்களான பிக் பஜார், மோர், ஈசி டே ஆகியவற்றுடன் மோதி தனது திட்டத்தின் சோதனைகளை நடத்தி வருவதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்