இவ்வளவு பெரிய ஜெல்லி மீனா??...வியக்கவைக்கும் பிரம்மாணட ஜெல்லி மீனின் வைரல் புகைப்படங்கள்

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (11:55 IST)
இங்கிலாந்து நாட்டில் உள்ள கடல் பகுதியில், ஆளுயரம் உள்ள ஒரு ஜெல்லி மீனை, உயிரியல் வல்லுநர் ஒருவர் தத்ரூபமாக புகைப்படம் எடுத்துள்ளார்.

பிபிசி செய்தி நிறுவனத்தின் வனவிலங்குகள் குறித்த பெண் செய்தியாளரும், உயிரியல் வல்லுநருமான லிசி டேலி என்பவர், இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு கடற்பகுதியிலுள்ள கடல் வாழ் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தினார். இந்நிலையில் லிசி டேலி, ஆராய்ச்சிக்காக கடலுக்குள் நீந்திகொண்டிருந்தபோது, விசித்திரமான ஆளுயர ஜெல்லி மின் ஒன்று அவரை கடந்து சென்றது.

உடனடியாக லிசி டேலியுடன் சென்றிருந்த ஒளிப்பதிவாளர் ஒருவர் தத்ரூபமாக அந்த ஜெல்லி மீனை புகைப்படம் எடுத்தார். பொதுவாக ஜெல்லி மீன்கள் 1 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே வளரக்கூடியவை. ஆனால் இந்த ஜெல்லி மீன், மிகவும் பிரம்மாண்டமாக ஆளுயரத்திற்கு இருப்பதால் மிகவும் வியப்பாக பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆராய்ச்சியாளர் லிசி டேலி, தற்பொது இந்த ஜெல்லி மீனின் வகையையும் அதன் தன்மைகளையும் குறித்து ஆராயவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஆளுயர ஜெல்லி மீனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்