டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை கொண்டு பரிவர்த்தனை செய்தால் நாளை முதல் கட்டணம் கிடையாது என்று ஐசிஐசிஐ அறிவித்துள்ளது.
ஜனவரி 9-ம் தேதி முதல் டெபிட், கிரிடிட் கார்டுகள் மூலம் செய்யும் பரிவர்த்தனைக்கு 0.25 முதல் 1 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் பஞ்சாப் தேசிய வங்கிகள் அறிவித்தனர்.
அதைத்தொடர்ந்து வங்கிகளின் வரி விதிப்பால் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் பெட்ரோல் பங்க் விற்பனையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்தது.
இந்நிலையில் தற்போது ஐசிஐசிஐ வங்கி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பரிவர்த்தனைக்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளது.