இந்திய தேர்தல் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்.. மன்னிப்பு கேட்டார் மெட்டா மார்க்..!

Siva

வியாழன், 16 ஜனவரி 2025 (08:52 IST)
மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் கடந்த 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த தேர்தல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், அதற்காக தற்போது அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக உள்ளது என்றும், இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தேர்தலை சந்தித்தாலும், ஆட்சியில் இருந்த கட்சிகள் பணவீக்கம், பொருளாதார பிரச்சனை, கோவிட் நிலைமை ஆகியவற்றை கையாளவில்லை என்றும் அதனால் ஆட்சியை பறி கொடுத்தன என்றும் கூறியிருந்தார்.

 மார்க் கருத்துக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலடி கொடுத்திருந்த நிலையில், தற்போது தேர்தல் முடிவு குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது.

2024 ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என மார்க் கூறிய கருத்து பல நாடுகளில் நடந்தது, ஆனால் இது இந்தியாவிற்கு பொருந்தாது. இந்த கவனக்குறைவுக்கு மன்னிப்பு கேட்கிறோம். மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான நாடு என்று கூறப்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்