சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக ரவுடி ஒழிப்பு போலீசார் ரவுடிகளை கைது செய்து வரும் நிலையில், பிரபல ரவுடி பாம் சரவணன் என்பவர் எம்கேபி நகரில் உள்ள ஒரு குடோனில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளர் பாம் சரவணன் என்று கூறப்படுகிறது. இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 33 வழக்குகள் இருப்பதாகவும், கேகே நகர் போலீஸ் நிலையத்தில் பிடிவாரண்ட் ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.