பொங்கல் பண்டிகையில் 454 கோடிக்கு மது விற்பனை.. பரபரப்பு தகவல்..!

Siva

வியாழன், 16 ஜனவரி 2025 (08:46 IST)
தமிழகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மூலம் மது விற்பனை நடந்து வரும் நிலையில், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அதிக அளவு மது விற்பனையாகி வருகிறது.

அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 13ஆம் தேதி போகி பண்டிகை அன்று 155.85 கோடி ரூபாய்க்கும், 14ஆம் தேதி பொங்கல் தினத்தில் 268 கோடி ரூபாய்க்கும் மொத்தம் சுமார் ரூ.454 கோடி விற்பனை ஆகி இருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டும் 450 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில் கிட்டத்தட்ட அதே அளவு தான் இந்த ஆண்டும் விற்பனை ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்