ட்ரம்ப் எச்சரிக்கை எதிரொலி! இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

Prasanth Karthick

வியாழன், 16 ஜனவரி 2025 (08:59 IST)

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

 

 

கடந்த 2023ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் இஸ்ரேலுக்குள் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு புகுந்து தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்றதுடன், பலரை பணையக் கைதிகளாகவும் பிடித்து சென்றது.

 

அதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக பாலஸ்தீன காசா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் பலியானார்கள். தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் நடந்த அமெரிக்க தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்றார்.

 

அப்போது அவர் இஸ்ரேல் - பாலஸ்தீன போர், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்டவற்றிற்கு தான் பதவிக்கு வந்ததும் முடிவுரை எழுதப்படும் என கூறியிருந்தார். இஸ்ரேல் விவகாரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பிணை கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரித்தும் இருந்தார்.

 

இந்நிலையில் வருகிற 20ம் தேதி டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. பாலஸ்தீன கைதிகள், இஸ்ரேலிய பணையக் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனால் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும் முதற்கட்டமாக இந்த போர் நிறுத்தம் வெற்றிகரமாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்