மூளக்காரன்யா நீ... BSNL ஆஃபரை கட், காபி, பேஸ்ட் செய்த Airtel...!!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (14:48 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கிய அதே சேவையை ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளது. 
 
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மக்களுக்கு சிறப்பான சிரமம் இல்லாத சேவையை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 
 
அந்த வகையில் கட்டணம் ஏதும் செலுத்தவில்லை என்றாலும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சிம் சேவைகள் துண்டிக்கப்படாமல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை செயல்பாடில் இருக்கும் என அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் இதே போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
ஆம், ஏப்ரல் 17 வரை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் சேவை துண்டிக்கப்படாது எனவும், மேலும் ரு.10 வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் என்றும் அந்த பணத்தை அவர்கள் பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்