கொரோனா லாக்டவுன்: மகனுக்கு தேசிய கீதம் கற்றுக்கொடுக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ்...!

ஞாயிறு, 29 மார்ச் 2020 (12:05 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க  அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் "கொரோனா வைரஸ் நகரவில்லை .. நாம் அதை நகர்த்துவோம் .. வீட்டில் தங்கியிருந்து உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுங்கள் .. பொறுப்புடன் இருங்கள் .. அதிகாரிகளுக்கு உதவுங்கள் என கூறி தனது மகனுக்கு தேசியகீதம் பாடி கற்றுக்கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

#COVID2019india #kuchkarona The VIRUS doesn’t move .. WE the PEOPLE move it .. STAY HOME.. HELP those around you .. BE RESPONSIBLE..HELP THE AUTHORITIES..a moment with my son..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்