வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா? சரிபார்த்துக்கொள்ளுங்கள்!!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (14:53 IST)
மத்திய அரசு வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பதினை கட்டாயம் ஆக்கியுள்ளது. இதனை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இணைக்கலாம்.




 
 
வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன. ஆன்லைனிலும், வங்கிக்கு நேரடியாகவும் சென்று இந்த இணைப்பை மேற்கொள்ளலாம்.
 
சில சமயங்களில் இணைப்பு முறைகளில் தவறு நிகழ்ந்திருந்தால் இணைப்பு ரத்தாகக்கூடும். எனவே, வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பது அவசியமாகும்.
 
# முதலில் www.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, ஆதார் மற்றும் வங்கி கணக்கு இணைப்பை சரிபார்த்தல் என்ற தெரிவை தேர்வு செய்யவும்.
 
# பின்னர் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பப்படும். 
 
# ஓ.டி.பி-ஐ சமர்பித்ததும் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு இணைக்கப்பட்டதற்கான விவரங்களைக் காண்பிக்கும்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்