பொதுச்செயலாளர் பதவி இல்லை; ஏமாற்றும் ஓபிஎஸ், பழனிச்சாமி?

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (14:30 IST)
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி இல்லை என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், பொதுச்செயலாளர் பதவிக்கான அதிகாரங்களை ஓபிஎஸ் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் கைப்பற்றியுள்ளனர்.


 

 
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை நீக்க அதிமுக சார்ப்பில் இன்று பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
1. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.
 
2. ஜெயலலிதா இருந்த போது அவரவர் வகித்த பதவிகளில் நீடிக்க வேண்டும்.
 
3. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு நடத்தி வருவதற்கு பாராட்டு.
 
4. ஜெயலலிதா நினைவிடம் அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசுக்கு பாராட்டு.
 
5. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு. வார்தா புயலில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு.
 
6. தினகரன் அறிவித்த நியமனங்கள் மற்றும் அறிவிப்புகள் செல்லாது.
 
7. சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் ரத்து.
 
8. ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர். இனி அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி இல்லை. இதற்காக அதிமுகவின் சட்டவிதிகளில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இனி அதிமுக பொதுச்செயலாளராக யாரையும் தேர்வு செய்ய மாட்டோம். எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க மாட்டோம்.
 
9. அதிமுகவில் வழி காட்டும் குழு ஏற்படுத்தப்படுகிறது. அந்த குழுவை வழி நடத்த ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஓ.பன்னீர் செல்வம், இணை தலைவராக எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் அதிகாரம் வழங்க சட்ட திருத்தம் செய்ய முடிவு செய்யப்படுகிறது. கட்சியின் சட்ட விதி 19-ல் இதற்காக திருத்தம் செய்யப்படுகிறது.
 
10. பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இணை தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது.
 
11. துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் செயல்படுவார்கள்.
 
12. கட்சியில் நபர்களை நீக்கவும், சேர்க்கவும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.
 
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி இல்லை என்றும் ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பொதுச்செயலாளர் பதிவிக்கான அதிகாரங்களை ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கைப்பற்றியுள்ளனர். மறைமுகமான பொதுச்செயலாளராக ஓபிஎஸ் மற்றும் எடப்படி பழனிச்சாமி செயல்பட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்