சிம் கார்ட், ஆதார் இணைப்பு: தீவிரம் காட்டும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள்!!
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (20:20 IST)
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ வாலட் இல்லாமல் மொபைல் மூலம் பணப் பரிவர்த்தனை அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் பரிமாற்றப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிம் கார்ட்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவும், கேஒய்சி படிவத்தை பெறவும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
பின்னர், அனைத்து நெட்வொர்க் சிம் காட்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனால், தற்போது பயன்பாட்டில் உள்ள வாடிக்கையாளர்களின் பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு எண்களை அந்ந்தந்த நெட்வொர்க் நிறுவனங்கள் அவர்களது ஆதார் எண்ணுடன் இணைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பிஎஸ்என்எல், ஏர்டெல், ஏர்செல், வோடபோன் உட்பட அனைத்து நிறுவனங்களும் இதில் தீவிரமாய் ஈடுபட்டுள்ளது.