10 ரூபாய்க்கு கம்மியா... BSNL மினி டேட்டா வவுச்சர் பற்றி தெரியுமா?

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (15:55 IST)
வழக்கமான டேட்டா பேக்கை தவிர்த்து, கூடுதல் வவுச்சராக பிஎஸ்என்எல் மினி டேட்டா பேக்குகளை வழங்கி வருகிறது.  
 
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எர்டெல், வோடபோன் நிறுவனங்கள் நெட்வொர்க் சந்தையில் போட்டி போட்ட நிறுவனங்கள் ஆகும். இந்தியாவின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏர்டெல், மற்றும் வோடபோன் வாடிக்கையாளர்களாகவே இருப்பர்.
 
கடந்த 2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம் வசீகரமான இண்டர்நெட் பிளானுடன் அறிமுகமாகியது. இதனால் வாடிக்கையாளர்கள் அப்படியே கொத்து கொத்தாக ஜியோவுக்கு தாவினார். ஏர்டெல் வோடஃபோன் ஆகிய நிறுவனங்களுக்கு இது பேரிடியாக இருந்தது. எனினும் வாடிக்கையாளர்களை தக்கவைக்க காலப்போக்கில் ஜியோவுக்கு நிகரான இண்டர்நெட் பிளான்கள் கொண்டுவரப்பட்டன.
கடந்த சில மாதங்களாக பிஎஸ்என்எல் நிறுவனமானது ஜியோ மாற்று ஏர்டெல் போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன்  போட்டியிடும் முனைப்பின் கீழ் சில கவர்ச்சிகரமான காம்போ திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. 
 
அதேபோல பிஎஸ்என்எல் வழக்கமான டேட்டா திட்டங்களோடு டேட்டா வவுச்சர்களை வழங்கிவருகிறது. இந்த டேட்டா வவுச்சர்கள் ஆனது ரூ.7 என்கிற மிகக்குறைந்த விலையில் இருந்து துவங்குகின்றன. 
 
ரூ.7 மதிப்புள்ள மினி டேட்டா வவுச்சர் 1 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் ஒரு நாள். அடுத்து ரூ.16 மதிப்புள்ள மினி 16 டேட்டா வவுச்சர் 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது, இதன் செல்லுபடியாகும் காலம் ஒரு நாள் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்