ஏர்டெல்லின் மை இன்ஃபினிட்டி திட்டம்: வாய்ஸ் + டேட்டா ஆஃபர்!!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (14:59 IST)
ஜியோ தனது தீபாவளி ஆஃபராக 100% கேஷ்பேக் சலுகையை அறிவித்ததை அடுத்து ஏர்டெல் மை இன்ஃபினிட்டி என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.


 
 
இந்த புதிய சலுகையில் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
 
அதோடு இந்த திட்டத்தி்ல் வழங்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத டேட்டா அடுத்த மாத பயன்பாட்டில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரூ.999-க்கு ரீசார்ஜ் செய்தால் 112 ஜிபி டேட்டா வழங்கப்படும், இதனை தினசரி 4 ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும். மேலும்  அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படும்.
 
மேலும் ஏர்டெல் செக்யூர் சர்வீஸ் சேவையை ஆறு மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்