மாதம்தோறும் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் !- இளம் பகவத் ஐஏஎஸ்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (13:15 IST)
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று திராவிட மாடலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் மூலம்  1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் 1000 வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  

''தமிழ்நாடு என்ற பெயர் எத்தனை ஆண்டுகள் இருக்குமோ அத்தனை ஆண்டுகளும்  நான் தான் ஆள்கிறேன் என்று பொருள் என்று  அண்ணா கூறினார். அதேபோல் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை பெண்கள் எத்தனை ஆண்டுகள் பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளும் இந்த ஸ்டாலின் தான் ஆளுகிறான் என்று பொருள்'' என்று கூறினார்.

இந்த நிலையில், இன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்படுவதால் மாதம் தோறும் எப்போது பயனர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து   கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு அதிகாரி இளம் பகவத் ஐஏஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். 

அதில், ''ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள்  வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டும்'' என்றும் 1.06 கோடி பயனாளிகளுக்கு இம்மாதத்திற்கான தொகை வரவு வைக்கப்பட்டும் இதை வங்கிகள், ஏடிஎம் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்''   தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்