இதுகுறித்து, அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில்,
நம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சிகள் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார்கள்.
அதனையேற்று கடந்த மாதம் 13-ஆம் தேதி மணிப்பூரில் இருந்து 17 வீரர்- வீராங்கனையர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விமான டிக்கெட், தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு பயற்சி அளிக்கப்பட்டது.