யுவ்ராஜ் சிங்கின் தந்தையா இது?... தோனியைப் பாராட்டி பேச்சு!

vinoth
செவ்வாய், 14 ஜனவரி 2025 (08:31 IST)
இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. அதனால் அவர் ஓய்வை அறிவித்தார்.

யுவ்ராஜ் சிங்கை ஒரு சர்வதேசக் கிரிக்கெட்டராக உருவாக்கியதில் அவரின் தந்தை யோக்ராஜ் சிங்குக்கும் முக்கியப் பங்குண்டு. யுவ்ராஜ் சிங்கை அவர்தான் பயிற்சிக் கொடுத்து உருவாக்கினார். யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட்டர்தான். அவர் இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ளார். யுவ்ராஜ் சிங்கின் கிரிக்கெட்டை வாழ்க்கை முடிவு பெற்றதற்கு தோனிதான் காரணம் என தொடர்ந்து யோக்ராஜ் சிங் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார்.

ஆனால் இப்போது அவரே தோனியைப் பாராட்டியுள்ளார் என்றால் நம்ப முடுகிறதா?. ஆம் பாராட்டியுள்ளார்.அதில் “ தோனி பயமறியா ஒரு வீரர்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் ஜான்சன் வீசிய பந்து அவரின் ஹெல்மெட்டைத் தாக்கியது. ஆனால் அடுத்த பந்தே அவர் சிக்ஸர் விளாசினார். அவரின் இந்த அச்சமற்ற தன்மை எனக்கு பிடிக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்