இன்று நடக்கும் உலகக்கோப்பை டி 20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்று தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை லீக் சுற்றில் மோதுகிறது. இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு கொஞ்சம் முன்பாக அணியில் டிகாக் விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ரிசா ஹென்ரிக்ஸ் அணியில் சேர்ந்துள்ளார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லெவிஸை தவிர மற்றவர்கள் அனைவரும் சொதப்ப 143 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்து ஆட்டத்தை முடித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தற்போது வரை 1 விக்கெட்டை இழந்து 6 ரன்கள் சேர்த்துள்ளது.