விராட் கோலி இதில்தான் பெஸ்ட்…பிரபல வீரர் கணிப்பு

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (18:22 IST)
ங்கிலாந்து முன்னாள் வீரர் இயன்பெல் விராட் கோலியை புகழ்ந்துள்ளார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு தோனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார். அதன்பிறகு இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் விராட் கோலி பொறுப்பேற்றார்.

முந்தைய ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிபோல் உலகில் பலமிக்க அணியாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளது. சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2-1 எனக் கைப்பற்றியது. பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உலக டெஸ்ட் சேப்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிக்கைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 121 புள்ளிகளுடன்(24போட்டி) முதலிடத்தில் உள்ளது

ஐபிஎல் தொடரிலும் கோலி தலைமையிலான பெங்களூர் அணி சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் யூசுப் விராட் கோலியைப் புகழ்ந்தார்.

இந்நிலையில், 70 சதங்கள் அடித்துள்ள கோலி ஒருநாள் போட்டியில் 12 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். டெஸ்ட் போட்டியிலும் 10 ஆயிடம் ரன்கள் நெருங்கியுள்ளார். 3 தரமான ஆட்டத்தில் சிறப்பான சராசரியை வைத்துள்ளார்,இந்தக் காலத்தில் அவர்தான் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமுடன் கோலியை ஒப்பீடு செய்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இது தவறு எனவும் கிரிக்கெட் வீர்ர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தற்போது, இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன்பெல், விராட் கோலி கவர் டிரைவ் ஆடுவதில் வல்லர். அவரைப் போன்ற திறமைவாய்ந்தவர்களால் தான் அப்படி விளையாட முடியும்… ஆனால் பாபர் அசாமால் கவர் டிரைவ் இதேபோல் கவர் டைவர் சார்ட் அடிப்பதி தேர்ந்தவர் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்