சினிமா இயக்குநரை வெட்டி சூட்கேசில் போட்ட பெற்றோர் !

வியாழன், 20 மே 2021 (19:45 IST)
ஈரான நாட்டில் தெஹ்ரான் என்ற நகரில்  வசித்து வந்தவர் பாபக் ஹரோம்தின். இவர் இங்கிலாந்து நாட்டில் பட்டமேற்படிப்பும், தெஹ்ரானி உள்ள பல்கலைக்கழகத்ல் கடந்த 2009 ஆம் ஆண்டு  சினிமா தொடர்பபாக படிப்பும் படித்தார்.

பின்னர், இங்கிலாந்து சென்ற பாபக் ஹரோம்தின்  சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவில் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே இவரது பெற்றோர் இவரைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்தனர். சமீபத்தில் ஈரான் சென்று தனது பெற்றோருடன் வசித்து வந்த பாபக் ஹரோம்தினை ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துகொள்ளும்படி கூறியது வாக்குவாதமாக முற்றியது. இதனால், பாபக் ஹரோம்தின் தந்தை அவரைக் கத்தியால் குத்தி கண்டந் துண்டமாக வெட்டி சூட்கேசில் அடைத்துள்ளார். இதற்கு அவரது தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து போலிஸார் விசாரணை நடத்தி பாபக் ஹரோம்தின் தாய், தந்தை இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்