விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்து அதிகம் பேரால் சமூகவலைதளங்களில் பின்தொடரப்படும் வீரராக கோலி இருக்கிறார். இதனால் அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் நிறைய விளம்பரங்களை செய்து வருகிறார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் ஒருவராக உள்ளார்.
இது புகைச்சலை ஏற்படுத்த விராட் கோலி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் “நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் என்னுடைய கணக்கில் இருந்து சிலவற்றை நீக்கும் போது இன்ஸ்டாகிராம் அல்காரிதம் தவறுதலாக இந்த லைக்குகளை இட்டிருக்கும் என நினைக்கிறேன். இதற்குப் பின்னால் எந்த காரணமும் இல்லை. இதன் காரணமாக தேவையில்லாத ஆருடங்கள் எழுவது வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.