ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் என்ற பகுதியில் கடந்த செவ்வாய் அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், இந்தியாவை மட்டும் இன்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பகல் காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து பதிவு செய்துள்ளார்.
ஒரு மதத்தின் பெயரில் யாரையும் பிரிக்க வேண்டாம். பிரிவினை என்பது அதிக பயத்தையும், பிரிவு உணர்வையும் ஏற்படுத்தும். நாம் அனைவரும் ஒரே இனம் என்ற உணர்வு இருக்க வேண்டும். முன்பு இருந்ததை விட நாம் இன்னும் அதிகமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.