விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்து அதிகம் பேரால் சமூகவலைதளங்களில் பின்தொடரப்படும் வீரராக கோலி இருக்கிறார். இதனால் அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் நிறைய விளம்பரங்களை செய்து வருகிறார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் ஒருவராக உள்ளார்.
சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்களின் பயோபிக் திரைப்படம் அதிகளவில் தயாரிக்கப்பட்டு அதில் முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஏற்கனவே சச்சின் மற்றும் தோனி ஆகியோரின் பயோபிக் ரிலீஸாகி வெற்றி பெற்றது. இப்போது கங்குலி மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோரின் பயோபிக் படங்களுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விராட் கோலியின் பயோபிக் திரைப்படம் உருவாகவுள்ளதாகவும், அதில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.