இது என் க்ரவுண்ட்… கே எல் ராகுலை ஜாலியாகக் கலாய்த்த விராட் கோலி!

vinoth

திங்கள், 28 ஏப்ரல் 2025 (07:58 IST)
நேற்று நடந்த பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது.  நேற்றைய போட்டியில், டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து எட்டு இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. நேற்றைய போட்டியில் கே எல் ராகுல் 41 ரன்கள், ஸ்டாப்ஸ் 34 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணியின் புவனேஷ் குமார் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெடுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து, 163 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியில் விராட் கோலி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். அதன் பின், கடைசி நேரத்தில் க்ருணால் பாண்டியா அதிரடியாக விளையாடி 73 ரன்கள் அடித்த நிலையில், 18.3 ஓவர்களில் பெங்களூர் அணி 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. க்ருணால் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஆர் சி பி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலானப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தபோது அதில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் கே எல் ராகுல் காந்தாரா பட பாணியில் ‘இது என்னுடைய கிரவுண்ட்’ என செய்தது கவனம் பெற்றது. இதையடுத்து டெல்லி போட்டி முடிந்ததும் விராட் கோலி ராகுலிடம் சென்று ‘இது என்னுடைய கிரவுண்ட்’ என ஜாலியாக சிரித்துக்கொண்டே சொல்லிப் பேசியது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்